இந்திய தண்டனை சட்டம் பிரிவு 119

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 119

‘‘குற்றம் எதுவும் நிகழ்ந்தால் அக்குற்றத்திற்கு என்ன தண்டனையோ, அதில் பாதி தண்டனையை அந்த அரசு ஊழியருக்கும் விதிக்க வேண்டுமென இந்திய தண்டனைச் சட்டம் 1860 இன் பிரிவு 119 அறிவுறுத்துகிறது’’.

விளக்கம்:

ஒரு பொதுப் பணியாளராக இருக்கிற எவரேனும், அத்தகைய பொதுப்பணியாளர் என்ற முறையில், எந்தஒரு குற்றம் புரியப்படுவதைத் தடுப்பதற்கு அவர் கடமை கொண்டுள்ளாரோ, எந்தஒரு குற்றம் புரியப்படுவதற்கு உதவி செய்யும் உள்நோக்கத்தில் அல்லது அவர் அதனால் அநேகமாக உதவி செய்யக்கூடும் என தெரிந்ததே. அத்தகைய குற்றத்தைப் புரிவதற்கான ஒரு திட்டமிருப்பதை ஏதாவதொரு செயல் அல்லது செய்வன செய்யாமையால், அல்லது ரகசியக் குறியீடு அல்லது ஏதாவதொரு பிற தகவலை மறைக்கும் உபகரணத்தைப் பயன்படுத்துவதால் தன்னிச்சையாக மறைத்தால் அல்லது அத்தகைய திட்டத்தின் பொருட்டு பொய்யானது என அவருக்கு தெரிந்தே, ஏதாவதொரு வெளிப்படுதலைச் செய்தால், குற்றம் புரியப்பட்டால்:- அக்குற்றம் புரியப்பட்டால், அக்குற்றத்திற்கென வகை செய்யப்பட்டுள்ள ஏதாவதொரு வகையிலான, அந்த சிறைத்தண்டனையின் மிக நீண்ட கால அளவில் ஒரு பாதியளவிற்கு நீட்டிக்கப்படக்கூடிய ஒரு காலஅளவிலான சிறைத்தண்டனையுடன், அல்லது அக்குற்றத்திற்கென வகை செய்யப்பட்டுள்ளவாறான அத்தகைய அபாரதத்துடன், அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்; குற்றம் மரணதண்டனை, முதலானவற்றுடன் தண்டிக்கப்படக்கூடியதாக இருந்தால்:- அல்லது, அக்குற்றம் மரண தண்டனை அல்லது ஆயுள் சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்படக்கூடிய இருந்தால், பத்து வருடங்கள் வரை நீட்டிக்கபடக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன்; குற்றம் புரியப்படாவிட்டால்:- அல்லது அக்குற்றம் புரியப்படாவிட்டால், அக்குற்றத்திற்கென வகை செய்யப்பட்டுள்ள அத்தைகைய சிறைத்தண்டனையுடன் மிக நீண்ட கால அளவில் நான்கில் ஒருபகுதி வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் அல்லது அக்குற்றத்திற்கென வகை செய்யப்பட்டுள்ளவாறான அத்தகைய அபாரதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.

Share Social

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1,852 comments

WhatsApp chat